மத்திய கிழக்கு போர்... உலக அமைதிக்கு அச்சுறுத்தல்… ஐ.நா. கவலை!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் 14 வது நாளாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதிலடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பதுங்கு 14வது நாளாக போர் நீடித்து வருகிறது.

பாரசீக வளைகுடாவில் உள்ள முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த கடல் வழித்தடம் தற்போது பதற்ற நிலையை சந்தித்துள்ளது. இப்பாதையில் பயணிக்கும் சில வணிக கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆண்டனியோ குட்டரஸ் வெளியிட்ட பதிவில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தூதரக ரீதியான முயற்சிகளின் மூலம் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
