வெறிநாய் கடியால் விபரீதம் ... மருத்துவமனை கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்த புலம் பெயர் தொழிலாளி!

சமீபகாலமாக தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த தெருநாய் கடியின் மூலம் ஒரு நபர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கோவை அரசு மருத்துவமனையில் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி ராம்சந்தர். இவர் கோவையில் வசித்து வரும் நிலையில் இவர் வெறிநாய் கடி தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதனால் அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அந்த நபர் ரேபிஸ் பாதிப்பு காரணமாக மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மருத்துவமனை தகவல் பலகையில் உள்ள கண்ணாடியை உடைத்து அதில் இருந்து கண்ணாடி துண்டை எடுத்து கழுத்து பகுதிகளை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது . இதில் ரத்தம் அதிகம் வெளியேறி அந்த நபர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரேபிஸ் அறிகுறிகள் இருந்தாலும், அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாலும் அந்த நபரிடம் தகுந்த உபகரணங்கள் இன்றி நெருங்க முடியவில்லை.தேவையான உபகரணங்களோடு நெருங்குவதற்குள் இத்துயர சம்பவம் நடைபெற்று முடிந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!