ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து... 4 பேர் பலி!
Feb 24, 2026, 17:28 IST
ஈரானின் மத்தியப் பகுதியாக உள்ள இஷ்பாஹான் மாகாணம், டோர்சா பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை பழச்சந்தையில் விழுந்தது. அதில் ராணுவ இரு விமானிகளும் மற்றும் சந்தையில் இருந்த இரண்டு வியாபாரிகளும் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சி பறப்பில் இருந்தபோது திடீர் தொழில்நுட்பப்பிரச்சனை அல்லது கோளாறு காரணமாக இது விழுந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. அவசர சேவையாளர்கள் தீ அணைத்து, இடத்தில் மீட்பு பணிகள் நடத்தினர்.
இது கடந்த சில நாட்களுக்குள் ராணுவ விமான விபத்துகளின் தொடர்ச்சியாக நடைபெறும் மற்றொரு சம்பவமாகும். தற்போது விபத் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
