நாளை திருப்பதியில் மினி பிரம்மோற்சவம்... ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி தரிசனம்!
நாளை திருப்பதி திருமலையில் மினி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. தை மாத வளர்பிறை சப்தமி திதியில் வரும் ரத சப்தமி, சூரிய பகவான் அவதரித்த நாளாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் திருமலையில் நடைபெறும் வாகனச் சேவைகளைக் காண்பது ஒரு முழுமையான பிரம்மோற்சவத்தைக் கண்ட புண்ணியத்தைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தர்களின் தரிசனத்திற்காக மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார். காலை 5.30 - 8.00 சூரிய பிரபை வாகனம் (முதல் தரிசனம்)காலை 9 - 10 சின்னசேஷ வாகனம், பகல் 11 - 12 கருட வாகனம், பிற்பகல் 1 - 2 அனுமன் வாகனம், மாலை 4 - 5 கற்பகவிருட்ச வாகனம், மாலை 6 - 7 சர்வ பூபாள வாகனம், இரவு 8 - 9 சந்திர பிரபை வாகனத்தில் வலம் வருகின்றனர்.

ரத சப்தமியை முன்னிட்டு அதிகப்படியான பக்தர்கள் குவிவார்கள் என்பதால், அன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை உள்ளிட்ட அனைத்து ஆார்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் ஏகாந்தமாக (பக்தர்கள் இன்றி) நடைபெறும்.
மாட வீதிகளில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அன்னப்பிரசாதம், குடிநீர், நீர்மோர் மற்றும் பால் ஆகியவற்றைத் தடையின்றி வழங்கத் தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ரத சப்தமி அன்று அதிகாலையில் சூரியக் கதிர்கள் நேரடியாக மலையப்ப சுவாமியின் பாதங்களில் விழுமாறு வாகனச் சேவை அமைக்கப்பட்டிருப்பது விசேஷமாகும். ரத சப்தமியை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனம் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்றும், மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருமலை முழுவதும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
