மினி பஸ் 100 அடி பள்ளத்தில் உருண்டு 3 குழந்தைகள் உட்பட 32 பேர் படுகாயம்!

 
mini bus
 

உதகையிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமம் நோக்கி 55 பயணிகளுடன் தனியார் மினி பஸ் சென்றது. கல்லக்கொரை ஹாடா பகுதியை கடந்து தங்காடு செல்லும் போது பேருந்தில் 32 பயணிகள் இருந்தனர். மணலாடா அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

ஆம்புலன்ஸ்

விபத்து நடந்த இடம் விவசாய நிலமாக இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பேருந்தில் பயணம் செய்த 17 ஆண்கள், 12 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 32 பேர் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்தின் உடைந்த பாகங்களை மீட்டனர். உதகை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!