டெல்லியில் 'மினி' காமன்வெல்த்... சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
உலக நாடுகளின் ஜனநாயகக் கோவில்களான நாடாளுமன்றங்களை வழிநடத்தும் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் சங்கமம் இன்று முதல் டெல்லியில் களைகட்டத் தொடங்கியுள்ளது. காமன்வெல்த் நாடுகளின் 28-வது சபாநாயகர்கள் மாநாடு (CSPOC) ஜனவரி 14 முதல் 16 வரை 3 நாட்கள் தலைநகரில் நடைபெறுகிறது.
இந்த மெகா மாநாட்டிற்காகத் தாய்லாந்து முதல் ஆஸ்திரேலியா வரை 42-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். இன்று இரவு 7:30 மணியளவில், வரலாற்றுப் புகழ்பெற்ற செங்கோட்டை வளாகத்தில் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு இரவு விருந்து வழங்குகிறார். அதற்கு முன்னதாக, பிரதிநிதிகளுக்காகச் செங்கோட்டையில் பிரம்மாண்டமான 'ஒலி - ஒளி' காட்சிக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 'சம்விதான் சதன்' (பழைய நாடாளுமன்றக் கட்டிடம்) மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாநாட்டை முறைப்படி தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். 56 காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் இருந்து சுமார் 61 சபாநாயகர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்பது மாநாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்டை நாடான வங்காளதேசத்தில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாலும், அங்கு அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாலும் அந்நாட்டின் சபாநாயகர் பங்கேற்கவில்லை என ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றப் பணிகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மீது சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதன் பொறுப்புணர்வுகள். ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் சபாநாயகர்களின் நடுநிலையான பங்கு.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
