+2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் வாழ்த்து!

தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகை வந்திருந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். பயம் இன்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்பள்ளி தேர்வு மையமாக செயல்படுவதால் அருகாமையிலுள்ள பள்ளி மாணவர்கள் சிறப்பு பேருந்தில் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களையும் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். 'மாணவச் செல்வங்களே மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தேர்வு எழுதுங்கள்' என்று அறிவுரை கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!