திருச்சி பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு! அடிப்படை வசதிகள் குறித்து விசாரணை!

 
பொதுத் தேர்வு

அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் பள்ளிகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டார்.  நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கிய நிலையில், திருச்சி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 133 மையங்களில் தேர்வெழுதினார்கள்.  12ம் வகுப்பு பொதுத் தேர்வினை திருச்சியில் மட்டுமே 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும் என மொத்தம் 34392 மாணவ /மாணவியரும் எழுதுகின்றனர்.

அன்பில் மகேஷ்

அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் அந்தந்த துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று 12'ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் திருச்சியில் தான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெற்ற வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும், ஆய்வு செய்து மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு முன்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் பள்ளிக்கு வந்த போது கல்வி பயின்ற பொழுது  இருந்த பள்ளி சீருடையில் வந்தார்.

அன்பில் மகேஷ்

இதே போன்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேர்வு நடைபெறும் அறைகளில் சென்று ஆய்வு செய்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web