அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி...!

 
துரைமுருகன் துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளரும் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான  துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரான   துரைமுருகனுக்கு  வயதுமூப்பு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.  

அப்பல்லோ

கடந்த சில நாட்களாகவே அவர் தொடர் மழை பனி காரணமாக  சளித்தொல்லையால்  அவதிப்பட்டு வந்துள்ளார்.  நேற்று இரவு சளித்தொந்தரவு அதிகமானதால்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது  மருத்துவர்கள்  அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்து   சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.  

துரைமுருகன்

இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   டிசம்பர் 4ம் தேதி சென்னையில் உருவான  மிக்ஜாம் புயல் காரணமாக  பல்வேறு நீர்நிலைகளில் நேரடியாக கள ஆய்வு செய்தார்.   வேலூர் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.தொடர்  அலைச்சல் காரணமாக   சளித்தொந்தரவு அதிகமாகி இருக்கலாம். இதனால் அவருக்கு அலர்ஜி மருந்துகளும் கொடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!