சட்டமன்ற தேர்தலில் இலக்கை அடைய பணியாற்ற வேண்டும்... அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி என்ற இலக்கை அடைய களத்தில் பணியாற்ற வேண்டும் என்று பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பாக முகவர்கள் செயலிவிளக்க கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் கூறிய அறிவுரையின்படி இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதுமிகவும் முக்கியமான தேர்தல் அனைவரும் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டிய நேரம் திமுக என்றால் அதுஓரு குடும்ப பாச உணர்வோடு பழகும் கட்சி தங்களது பகுதியில் வரும் 1ம் தேதி ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நடைமுறையை அனைவரும் பின்பற்றி தொடரவேண்டும்.
தூத்துக்குடி தொகுதியில் ஓரு பகுதியில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் குறைந்த பட்சம் 300பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டு குறைய கூடாது. கூடுதலாக தான் இருக்க வேண்டும். அதே போல் வார்டு பகுதியில் உள்ள வட்டச்செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அனைவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் கடந்த காலத்தில் புதுப்பிக்காத உறுப்பினர்களையும் புதுப்பிக்கும் வகையில் நினைத்து கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் எல்லோருடைய இல்லத்திலும் ஓருவகையில் நன்மைகள் கிடைத்திருக்கும் சிலருக்கு விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அந்த நன்மைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும். ஏதேனும் உதவி தேவை என்றால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். ஓட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் ஓற்றுமையுடன் பணியாற்றி 2026ல் தேர்தலில் 200தொகுதி என்ற இலக்கை நாம் வென்றாக வேண்டும்.
அதற்காக சபதம் ஏற்று பணியாற்றுங்கள் நோகாமல் நுங்கு சாப்பிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டும். பணியாற்றுபவர்கள் நல்லமுறையில் பணியாற்றுங்கள் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்திற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!