மகளிர் உரிமைத் தொகையால் கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது - அமைச்சர் கோவி.செழியன்!

 
அமைச்சர் கோ.வி. செழியன்

தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது" மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

அமைச்சர் தனது உரையில், ஒரு கிராமத்தை உதாரணமாகக் கொண்டு இத்திட்டத்தின் பொருளாதாரப் பயனை விளக்கினார்: ஒரு கிராமத்தில் சுமார் 2,500 பெண்களுக்குத் தலா ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது எனில், அந்த ஒரு கிராமத்திற்கு மட்டும் மாதம் ₹25 லட்சம் அரசு நிதியாகச் செல்கிறது. இந்தத் தொகை நேரடியாக அந்தந்த கிராமங்களில் உள்ள மளிகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகளில் செலவிடப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் பணம் இல்லை என்ற நிலை மாறி, பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. "ஆயிரம் ரூபாய் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது குடும்பத் தலைவிகளின் கௌரவம் மற்றும் பொருளாதார சுதந்திரம்" என அமைச்சர் குறிப்பிட்டார்.

மகளிர் உரிமைத் தொகை

குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்காகவும், குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காகவும் இந்தத் தொகை பெண்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இந்தச் சிந்தனை, கடைக்கோடி கிராமம் வரை வளர்ச்சியை எட்டச் செய்துள்ளது என்றார்.

ஓமலூர் போன்ற தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டாலும், திமுக அரசின் திட்டங்களால் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். "எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது" என அவர் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 1.15 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்குத் தொடர்ந்து உரிமைத் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!