கேகேஎஸ்எஸ்ஆர் தாயார் காலமானார்.. முதல்வர் இரங்கல்...!

 
கேகேஎஸ்எஸ்ஆர்

தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவர் திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர். இவருடைய  தாயார் அமராவதி அம்மாள். இவர்  வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 94.  அவரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறும் என அமைச்சரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து  விருதுநகர் மாவட்ட திமுக செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  ‘’விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்   தாயார் ஆர்.அமராவதி அம்மாள்  

அமராவதி அம்மாள்

இவர் வயது முதிர்வால் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 94 என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22 /12/ 2023 வெள்ளிக்கிழமை மாலை விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் உள்ள அவரது இல்லத்தில்   நடைபெறும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் தாயாரின் மறைவுக்கு கழகத் தொண்டர்கள், தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேகேஎஸ்எஸ் ஆர்

இது குறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் பதிவில் ''மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்‌  தாயார் திருமதி. அமராவதி அம்மாள்  வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்‌ அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  முதல்வர் ஸ்டாலின்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களைத் தொலைபேசி  மூலம்  தொடர்புகொண்டும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.'' என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   தமிழக அமைச்சர்கள் பலரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அலைபேசி மூலம்  இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.
 

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web