அமைச்சர் கே.என். நேரு Vs திருச்சி சிவா... ஆதரவாளர்களிடையே மோதல்.. அடுத்து என்ன? திருச்சி மக்கள் ஆவல்?

திமுகவில் எந்த வார்த்தை பிரபலமோ இல்லையோ என்றைன்றைக்கும் இந்த வார்த்தை மிகப் பிரபலம். கொடியோடு வா என்றால் தடியோடு வா என்று அர்த்தம் என அவர்கள் கட்சியினரே பேசிக் கொள்வது சகஜம். அன்றைய காலங்களில் இரும்பு ராடு, சவுக்கு மரம் ஆகியவற்றிலேயே கொடியை கட்டிக் கொண்டு வருவார்கள். மீண்டும் அப்படிப்பட்ட நிலை நேற்று உதித்தது.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் காவல் நிலையம் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு போனது. ஆனால் இதில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 வது வட்ட செயலாளர் ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகிய 5 பேரும் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களின் மீது IPC143, 147,447,452,294 B, 353,332,427,506 (2) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 353 ,506 (2) 332 ஆகிய பிரிவுகள் பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும். கிட்டத்தட்ட பத்து நாட்களாவது சிறைக்கு சென்ற பின்னரே ஜாமீன் கிடைக்கும். மேலும் இந்த 5 நபர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்கள் மாநிலங்களவை உறுப்பினரை மிரட்டியதாக மக்கள் நம்பவில்லை.
அராஜகம் pic.twitter.com/KmsL4Z0FUP
— Dina Maalai (@DinaMaalai) March 15, 2023
திருச்சியில் உள்ள மற்ற ஒரு அமைச்சரை மிரட்டும் தொனியில் நடைபெற்ற சம்பவமாகவே மக்கள் கருதுகிறார்கள். 55 வது வட்ட செயலாளர் ராமதாஸ் மீது பாரத பிரதமர் மோடி அவர்கள் புகைப்படத்தை ரேசன் கடையில் இருந்து கழற்றி சாக்கடையில் வீசிய வழக்கு, பொது வெளியில் வேட்டியினை தூக்கி காட்டி அசிங்கப்படுத்திய வழக்கு ஆகிய வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளுக்காக அமர்வு நீதிமன்ற காவல் துறையினர் வழக்கு செய்துள்ளார்கள். ஆனால் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அவர் முன் ஜாமீன் மனுகூட தாக்கல் செய்யவில்லை இவர்கள் செயலால் தூக்கத்தை இழந்து விடியலை தர முடியாமல் முதல்வர் வாடுவது என்னவோ உண்மை தான் என்றாலும் அரசு இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என கண்கொத்தி பாம்பாக கவனிக்கத் தொடங்கி விட்டனர் மலைக்கோட்டை மக்கள்!.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க