அமைச்சர் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இதுவரை அவர் வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உட்பட பல அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார் . சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க பேசிய வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!