அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்!!

 
செந்தில் பாலாஜி

  ஜூன்  13ம் தேதி  செந்தில் பாலாஜி நள்ளிரவு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட போது  திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு  நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 4 அடைப்புகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி

இதனையடுத்து   ஜுன் 21 ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.   மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
தற்போது உடல்நலம் தேறியதை அடுத்து செந்தில்பாலாஜி, காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஜூலை 26 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,   புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

செந்தில் பாலாஜி

அங்குள்ள மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் புழல் சிறையில்  முதல் வகுப்பு அறையில் அடைக்கப்படுவார்  என தகவல் வெளியாகியுள்ளது.  10 நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இருக்க முடியும் என நீதிபதி  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web