எல்.முருகனின் கனவு பலிக்காது ... முருகர் எங்களோடு இருக்கார்... அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

 
சேகர்பாபு


தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி இந்த ஆட்சி எனக் கூறியுள்ளார். மேலும்  “எல்.முருகன் பாஜக தலைவராக இருந்த பொழுது வேல் யாத்திரை நடத்தி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்.  

சேகர்பாபு

அவர் வேல் யாத்திரைக்கு பிறகு தான் தமிழ்நாட்டு மண்ணில் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி காண்பித்தார் நம்முடைய முதல்வர். அண்ணாமலை ஆன்மீகத்தை கையில் எடுத்து தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில்  தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என்று காவடி கூட எடுத்துப் பார்த்தார், காலில் செருப்பு அணியாமல் நடந்து பார்த்தார். ஆனால் தமிழ்நாடு மக்கள் 40 தொகுதிகளையும் திமுகவிற்கு என்று விடை அளித்தார்கள். மதத்தால், இனத்தால், மொழியால் தமிழக மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது

சேகர்பாபு


தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி இந்த ஆட்சி, இந்த ஆட்சியைப் போல் வேறு எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது கிடையாது. அறுபடை வீடுகளை புனரமைக்கும் பணிக்கு 817 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். திருப்பரங்குன்ற சம்பவத்தை கையில் எடுத்து அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், இனத்தால் மொழியால் மதத்தால் தமிழ் நாட்டு மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது, மதுரை மண்ணின் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். மாமன், மச்சானாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். சங்கிகள் தான் திருப்பரங்குன்ற சம்பவத்தை பெரிதாக்க நினைக்கிறார்கள், இது ராமானுஜரின் மண் ஒற்றுமைக்கு விலை மதிப்பு தர முடியாத மண், எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார்” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web