சுட்டெரிக்கும் வெயிலில் அமைச்சர் உதயநிதிக்காக 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள்! அதிகாரிகள் அட்ராசிட்டி!

 
உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதியம் 12 மணிக்கு வருவதாக இருந்தது. இதனையொட்டி ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் காலையிலேயே மைதானத்தில் வந்து காத்திருந்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மதியம் 2.30 மணியளவில் தான் நிகழ்ச்சிக்கு வந்தார். 

அதுவரை சுட்டெரிக்கும் வெயிலில் ஸ்கேட்டிங் மாணவ மற்றும் மாணவிகள் காத்திருந்தனர். அதில் பல மாணவ, மாணவிகள் சோர்ந்து போய் மைதானத்திலேயே உட்கார்ந்து இருந்தனர். ஆனால் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தில் கல்வெட்டு திறப்பதற்காக அவசர அவசரமாக தற்காலிக கல்வெட்டு ஒட்டப்பட்டது. 

உதயநிதி ஸ்டாலின்

மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க மாவட்ட கழகம் சார்பில் நகரம் முழுவதும் விளம்பர ப்ளக்ஸ், இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட 10 அடி உயரத்திற்கான கொடிகள் ஆகியவை ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. இந்த செயல் தஞ்சாவூர் மாநகராட்சியில் விதிமுறைகளை அரசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி இந்தக் கொடிக்கம்பங்கள் நகரம் முழுவதும் காணப்பட்டது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சீர்மிகு நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளான நுழைவுவாயில், நடைபாதை, சறுக்கு தளம், கைபந்து விளையாட்டு மைதானம், ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்

மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மகளிருக்கான கைப்பந்து போட்டியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி பழனி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web