ராணுவ கர்னல் சோபியா குரோஷி குறித்த சர்ச்சை பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட அமைச்சர் விஜய் ஷா.!

 
 ராணுவ கர்னல் சோபியா குரோஷி குறித்த சர்ச்சை பேச்சுக்கு பகிரங்க   மன்னிப்பு கேட்ட அமைச்சர் விஜய் ஷா.!
மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா. இவர் , கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் எதிர்ப்புக்கள் கிளம்பின. இதனையடுத்து தற்போது பகிரங்க மன்னிப்பு  கோரியுள்ளார்.

அமைச்சர் விஜய் ஷா நேற்றைய தினம், இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில்  ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததில் பிரதமர் மோடியின் தலைமையை அவர் பாராட்டினார். பின்னர், நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு  எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது