அமைச்சர்கள் உதயநிதிக்கு துதி பாடும் குயில்களாக இருக்கின்றனர்... தமிழிசை கடும் தாக்கு!
தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் நேற்று பாஜக கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தலை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் தொகுதி மறுவரையறை குறித்து இதுவரை மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தினம் தினம் அதைப் பற்றி திமுக அரசு பேசி வருகிறது.அவர்களுக்கு 2026 ம் ஆண்டு தேர்தலை நினைத்து இப்போதே பயம் வந்துவிட்டது. மக்களுக்காக தொண்டாற்றும் கட்சியாக பாஜக இருந்து வருகிறது.

இந்நிலையில், திமுகவுக்கு மக்கள் நலனை பற்றி எந்தவிதமான கவலையும் அக்கறையும் இல்லை. மேலும் உதயநிதிக்கு துதி பாடும் குயில்களாக அமைச்சர்கள் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
