நடுரோட்டில் பைக் ஸ்டண்ட் செய்த அமைச்சர் மகன்... வைரலாகும் வீடியோ!

 
பைக்கில் ஸ்டண்ட் செய்த அமைச்சர் மகன்!

நடுரோட்டில் அமைச்சர் மகன் ஒருவர் தனது விலையுயர்ந்த பைக்கில், ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கோர். இவரது  மகன் பைக் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரின் மகன் ஆதித்யராஜ் மகாராஷ்டிராவில் உள்ள பூனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சதாரா- கோலாப்பூர் பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பைக்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டண்ட் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


அப்பகுதியில் சென்ற மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவில், காவல்துறையினர் மற்றும் வாகன அதிகாரிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளனர்.  

பைக்

சாதாரண நபர் செய்திருந்தால் அவருடைய வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டு கூடுதலாக அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.அமைச்சரின் மகன் ஓட்டிய விலை உயர்ந்த வெளிநாட்டு பைக்கில் நம்பர் பிளேட் கூட இல்லை. ஆனால் இதனை எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேதனை அளிப்பதாக  அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web