ராமநவமியில் அயோத்தியில் அதிசயம்... ராமர் சிலை நெற்றியில் சூரியஒளி!

இந்நிலையில் தான் இன்று பிற்பகல் சரியாக 12 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரியஒளி விழுந்தது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ராமர் கோவில் சிலையின் நெற்றியில் சூரியஒளி விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினமும் தரிசனம் செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி தான் ராமர் பிறந்த இடம். இதனால் இந்த கோவில் மிகவும் பிரசித்திப்பெற்று விளங்குகிறது. தினமும் பல ஆயிரம் மக்கள் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ராமரின் 5 வயது குழந்தை பருவ சிலை உள்ளது. இந்த சிலை புன்முறுவல் சிரிப்புடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தில் சூரியஒளி நேரடியாக ராமர் சிலையின் நெற்றியில் விழும்படி கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநவமி தினமான இன்று பிற்பகல் 12 மணிக்கு கருவறையில் உள்ள பாலராமர் சிலையின் நெற்றியின் மீது சூரியஒளி விழுந்தது.
இந்நிகழ்ச்சிக்கு 'சூர்ய திலக்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. ராமநவமி தினத்தில் கோவிலில் உள்ள பாலராமரின் நெற்றியில் சரியாக பிற்பகல் 12 மணிக்கு சூரியஒளி விழ வேண்டும் என்பதற்காகவே கோவிலில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தில் மட்டுமே நடக்கும் வகையில் கோவில் கட்டுமானம் அமையப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அந்த நிகழ்வு நடந்ததில் பக்தர்கள் பரவசமடைந்தனர். குறைந்தபட்சம் 3 நிமிடம் முதல் அதிகபட்சம் 3.50 நிமிடங்கள் வரை ராமர் சிலையின் நெற்றியில் சூரியஒளி என்பது படும். ராமர் சூரிய குலம் இச்வாகு வம்சத்தில் பிறந்தவர். இதனால் ராமர் சிலையின் நெற்றியில் சூரியஒளி விழும் வகையில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!