மிர்ராவின் ஆக்ரோஷ ஆட்டம்... அடிலெய்டு டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அத்தனைப் பேரையும் தனது மின்னல் வேக ஆட்டத்தினால் வசியப்படுத்தி இருந்தார் மிர்ரா ஆண்ட்ரிவா. ரஷ்யாவின் இந்த இளம் வீராங்கனை தான் கலந்துக் கொள்கிற போட்டிகளில் எல்லாம் புதிது புதிதாக ரசிகர்களை, தனது லாவகமான ஆட்டத்தினால் தன் வயப்படுத்துகிறார். துபாயில், வெற்றிப் பெற்ற பின்னர், மைதானத்தில் 19 வயது பருவ மங்கையாக அவர் அமர்ந்து போஸ் கொடுத்தது அத்தனை அழகு.
தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக நடைபெறும் முக்கியமான தொடர்களில் ஒன்றான அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வளர்ந்து வரும் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

போட்டியின் ஆரம்பம் முதலே மிர்ரா ஆண்ட்ரிவா தனது துல்லியமான ஷாட்கள் மூலம் எதிராளியைத் திணறடித்தார். கனடா வீராங்கனையால் ரஷிய வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் மிர்ரா ஆண்ட்ரிவா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
