மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகிப் போட்டி... தமிழ் விவசாயி மகளுக்கு வீர கௌரவம்!
புனேவில் நடந்த ‘மிஸ் ஹெரிடேஜ் இந்தியா 2025’ தேசிய அழகிப்போட்டியில் திறமை, பேச்சுத் திறன், சமூக பார்வை ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்த ஜோதிமலர், ‘மிஸ் டூரிசம் அம்பாசடர் ஹெரிடேஜ் இந்தியா 2025’ பட்டத்தை வென்று தேசிய அளவில் பெருமை சேர்த்தார். அதன் தொடர்ச்சியாக தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025’ போட்டியில் இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் கலந்து கொண்ட அவர், ‘கலாச்சார தூதர்’ பட்டத்தையும் வென்று சர்வதேச மேடையிலும் முத்திரை பதித்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காக்கூரைச் சேர்ந்த சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோதிமலர், பி.டெக் முடித்து பெங்களூரில் ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே இருந்த அழகிப்போட்டி கனவை நோக்கி செல்வதில், நிறம், தோற்றம் குறித்து சமூகத்தின் கிண்டல்களையும், மாடலிங் உலகின் வெளித் தோற்ற மதிப்பீடுகளையும் அவர் தன் மனஉறுதியால் தாண்டினார். “என் நிறமே என் அடையாளம்” என்ற நம்பிக்கை அவரை விழவிடாது பிடித்திருக்க, ஆன்லைன் மூலம் மாடலிங் கற்ற اوரத்தில் ‘மிஸ் கர்நாடகா 2024 – மிஸ் ஃபேஷன் ஐகான்’ என்ற முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

“உன்னால் முடியாது” என்ற சொற்களை ஆயிரம் முறை கேட்டும் தன்னம்பிக்கையை ஆயுதமாக மாற்றி வெற்றியடைந்தவர் ஜோதிமலர். பெண்கள் மீது மக்களின் பார்வையை மாற்ற வேண்டும் என்பதே அவரது கனவு. அதற்காக, கல்வி மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வலிமை அளிக்கும் அறக்கட்டளை ஒன்றை தொடங்கும் அடுத்த இலக்கை நோக்கி நகரும் அவர், “சுய மரியாதையுடன் கனவுகளைத் துரத்தும் பெண்ணிடம் வெற்றி தானாக வந்து சேரும்” என்பதை தன் பயணத்தால் நிரூபித்து வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
