ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி... தாய்லாந்து கல்லூரி மாணவி பட்டத்தை வென்றார்!
ஐதராபாத்தில் நடந்த உலக அழகிப்போட்டியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ அழகி பட்டத்தை வென்றார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி நடந்து வந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்பட பலர் பங்கேற்றனர். ஐதராபாத்தில் உள்ள ‘ஹைடெக்ஸ்’ என்ற இடத்தில் இறுதிப்போட்டி நேற்று மாலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுலாத்துறை மற்றும் உலக அழகிப்போட்டி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இறுதிப்போட்டியை 2016-ம் உலக அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்டெப்னி டெல் வாலே, சச்சின் கும்பர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். சிறப்பு விருந்தினராக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார். விழாவில் சமூக சேவைகளை செய்து வரும் பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு மனிதாபிமானத்திற்கான விருது வழங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 108 அழகிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 40 அழகிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இந்திய அழகி நந்தினி குப்தாவும் இடம்பெற்று இருந்தார்.
போட்டியின் முடிவில் உலக அழகியாக தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2024-ம் ஆண்டின் உலக அழகி கிறிஸ்டினா நீலநிற கிரீடத்தை அணிவித்தார். அவருக்கு அடுத்து 2-வது இடத்தை எத்தியோபியா நாட்டை சேர்ந்த ஆசட் டெரஜியும், 3-வது இடத்தை போலந்து அழகி மாஜா கிளாஜ்டாவும் பெற்றார்.

இந்தியா சார்பில் போட்டியிட்ட அழகி நந்தினி குப்தா முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த முதல் உலக அழகி பட்டம் வென்றவர் ஓபல் சுசாதா என்பது குறிப்பிடத்தக்கது. 22 வயதாகும் இந்த அழகி தாய்லாந்தில் உள்ள கல்லூரியில் அரசியல் படிப்பு படித்து வருகிறார்.
உலக அழகி பட்டம் வென்ற தாய்லாந்து அழகி தனது 16 வயதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர். எனவே தாய்லாந்தில் மார்பகப் புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிதி திரட்டியும் வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
