பள்ளியின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 160க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலி!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் பெரும் சோக சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் தொடக்கப் பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 160க்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நடந்ததால் படித்த அனைத்து சிறுமிகளும் தீயில் கருகி பலியாகியுள்ளன. இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்குக் காரணமாக நவீன கணினி நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறான கணக்கீடு இருக்கலாம் என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி பள்ளி வளாகம் இருந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினரின் தளமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பழைய தகவல்களை வைத்து அந்த இடம் ராணுவ இலக்காக தவறாக அடையாளம் காணப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், பள்ளிகள் அல்லது மருத்துவமனைகளை திட்டமிட்டு தாக்குவது எங்கள் நடைமுறை அல்ல என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். போர் நடவடிக்கைகளில் முழுமையாக கணினி நுண்ணறிவு மீது நம்பிக்கை வைப்பது ஆபத்தானது என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
