மிரட்டல்... இந்தியா முதல் ரஷ்யா வரை... 18,000 கி.மீ வரை செல்லும் ஏவுகணை பட்டியல்!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து வரும் நிலையில், உலக நாடுகளின் ராணுவ பலம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்தையே துவம்சம் செய்யும் 'நீண்ட தூர ஏவுகணைகள்' (ICBM) யாரால் அதிகம் வைத்திருக்கிறார்கள்? இதோ அந்த அதிரடிப் பட்டியல்:
1. ரஷ்யாவின் 'சாத்தான்' (Satan II): ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யாதான் தற்போது 'கிங்'. அந்நாட்டின் RS-28 Sarmat (சாத்தான் II) ஏவுகணை சுமார் 18,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும். ஒரே நேரத்தில் பல அணு ஆயுதத் தலைப்புகளைச் சுமந்து செல்லும் இந்த ஏவுகணை, நவீன ரேடார்களிடம் கூட சிக்காது என்பதுதான் இதன் ஸ்பெஷல்!

2. சீனாவின் 'டிஎஃப்-41' (DF-41): சீனாவின் வசம் உள்ள இந்த ஏவுகணை 12,000 முதல் 15,000 கி.மீ தூரம் வரை பாயும் வல்லமை கொண்டது. அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் சீனாவிலிருந்தே தாக்க இந்த ஒரு ஏவுகணையே போதும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
3. அமெரிக்காவின் 'மினட்மேன்' (Minuteman III): ராணுவ பலத்தில் சளைக்காத அமெரிக்கா, 14,000 கி.மீ தூரம் வரை பாயும் Minuteman III ரக ஏவுகணைகளைக் கைவசம் வைத்துள்ளது. இது தவிர, நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் Trident II D5 ஏவுகணைகளும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் உள்ளன.
4. வடகொரியாவின் 'வாசாங்' (Hwasong): சிறிய நாடாக இருந்தாலும், கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரியா 13,000 கி.மீ தூரம் வரை பாயும் Hwasong-18 ஏவுகணையைச் சோதித்து உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

5. இந்தியாவின் 'அக்னி-V' (Agni-V): இந்த 'பவர்ஃபுல்' பட்டியலில் இந்தியாவும் கெத்தாக இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் அக்னி-V ஏவுகணை 5,500 கி.மீ தூரம் பாயும் என அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான இலக்கு 8,000 கி.மீ வரை இருக்கும் எனப் பன்னாட்டு வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும், 12,000 கி.மீ தூரம் வரை செல்லும் K-6 மற்றும் அக்னி-VI ஆகிய மெகா ஏவுகணைத் திட்டங்களும் தற்போது ரகசியமாகத் தயாராகி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
