எண்ணெய் கிணறுகள் மீது பாயும் ஏவுகணைகள்... உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய ஈரானின் 'பதிலடி'!

 
ஈரான் ஈரான்

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் நாட்டின் முக்கிய அங்கமான மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் இன்று அதிகாலை அதிரடி ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் பல பிரிவுகளில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, வானுயரத்திற்குப் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அலகுகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுள்ள நிலையில், அவசரகால மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என குவைத் பெட்ரோலியம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே கத்தாரின் தொழில் நகரமான ராஸ் லஃபான் மற்றும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குவைத் மீதான இந்தத் தாக்குதல், போரின் வீச்சை அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி விடுத்துள்ள எச்சரிக்கையில், "இதுவரை நாங்கள் காட்டியிருப்பது எங்களின் வலிமையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. இஸ்ரேல் மீண்டும் எங்களது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்தால், அதன்பிறகு எங்களிடம் எந்தவிதக் கட்டுப்பாடும் இருக்காது; போர் இன்னும் உக்கிரமடையும்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வல்லரசு நாடுகளின் தலையீட்டையும் மீறி போர் முற்றி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என்ற பீதி உலகெங்கும் பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!