மாயமான 15 வயது சிறுமி சடலமாக மீட்பு!

 
ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ்

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில் காணாமல் போன 15 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 3ம் தேதி பணிக்கு சென்று திரும்பியபோது மகள் வீட்டில் இல்லாததை கவனித்தனர். இதையடுத்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஆம்புலன்ஸ்

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் அனகாபுத்தூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் கல்குட்டையில் சிறுமி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!