புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயம்... பெரும் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மர்மமாக மாயமாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷிகா என்ற சிறுமி, சில நாட்களாக உடல்நலக் குறைவு இருந்தது. திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதும், கடந்த நாளை உயிரிழந்தார். உடலுக்கு உறவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் மன்னியாற்று இடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இன்று காலை சடங்குகளுக்காக உறவினர் இடுகாட்டில் சென்ற போது, சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. உடலுக்கு அருகே ஆடைகள், எலுமிச்சம்பழம், குங்குமம் போன்ற பொருட்கள் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கி, யார், எப்போது சிறுமியின் உடலை எடுத்து சென்றார் என்பதற்காக சோதனை மேற்கொண்டுவருகின்றனர். சம்பவத்தின் பின்னணி மற்றும் மர்மம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
