காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (62). விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (55).இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோய் மற்றும் 2 கண்களிலும் நீர் வடிந்து சிரமப்பட்டு வந்துள்ளார்.

பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலையில் ஊருக்கு அருகில் உள்ள தனியார் தோட்டத்துகிணற்றில் பிணமாக மிதந்தார்.

தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சென்று அவரது உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கழுகுலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
