டி20 தொடரிலும் மிட்செல் அதிரடி வேண்டும்.... நியூசிலாந்து கேப்டன் உறுதி!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாட வேண்டும் என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது இதுவே முதல் முறை.

இந்த வரலாற்று வெற்றியில் டேரில் மிட்செல் முக்கிய பங்காற்றினார். முதல் போட்டியில் 84 ரன்கள் எடுத்த அவர், அடுத்த இரண்டு போட்டிகளில் சதம் விளாசினார். இரண்டாவது போட்டியில் 131 ரன்களும், மூன்றாவது போட்டியில் 137 ரன்களும் எடுத்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார்.
இதுகுறித்து பேசிய சாண்ட்னர், தொடக்கத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மிட்செல் சிரமப்பட்டதாக கூறினார். கடின பயிற்சியின் மூலம் தற்போது அவர் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்கிறார் என்றார். ஒருநாள் போட்டிகளில் காட்டிய அதே அதிரடியை டி20 தொடரிலும் தொடர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
