இன்று எம்.எல்.ஏ., ஜமீலாவின் இறுதிசடங்குகள்... கேரள அரசியலில் சோகம்!
பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தவர். கேரள மாநில அரசியலில் முக்கியப் பங்காற்றி, மக்களின் நம்பிக்கை முகமாகவும் வலம் வந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (CPM) சேர்ந்த கனத்தில் ஜமீலா.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 59. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று கேரளாவில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோயிலாண்டி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கனத்தில் ஜமீலா தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கனத்தில் ஜமீலா அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல், மக்கள் பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர். கோழிக்கோடு குட்டியாடி பகுதியைச் சேர்ந்த அவர், பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்து மக்கள் பணியாற்றினார்.
பஞ்சாயத்துத் தலைவர், ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் (ஜனநாயக மகிளா அசோசியேஷன்), கோயிலாண்டி சட்டமன்ற உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தனது மக்கள் பணிகள் மூலம் அவர் கோழிக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமான தலைவராகத் திகழ்ந்தார். ஏழை மக்களுக்காகவும், பெண்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

கனத்தில் ஜமீலா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்ததும், கேரள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய அர்ப்பணிப்பான அரசியல் பயணம், பலருக்கும் ஒரு உத்வேகமாக இருந்தது என்று அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கனத்தில் ஜமீலா அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதியை இழந்து விட்ட சோகத்தில் கோயிலாண்டி தொகுதி மக்கள் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
