இன்னும் 9 அமாவாசைக்குள் திமுகவின் நாடகம் முடிவுக்கு வரும்…. எம்.எல்.ஏ ஜெயராமன் ஆவேசம்!

 
jeyaraman
 


திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், திமுகவை கண்டித்து 15 வேலம்பாளையம் சிறுபூலுவப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் நடத்தப்பட்டது.  இதில் எம்எல்ஏ ஜெயராமன் கலந்து கொண்டார்.  அப்போது அவர்  திருப்பூர் மாநகராட்சியில் குப்பை வரி, சொத்துவரி என திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களுக்கு கஷ்டம் காலம் தான்.இங்குள்ள அனைத்து தொழில்களும் ஒடிசா, மத்தியப் பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது. அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் என ஏராளமான சலுகைகளை அந்த மாநில அரசு வழங்கியுள்ளது.

 மக்களே தங்களை திமுக வினரிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்... இபிஎஸ் ஆவேசம்!
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழில் அந்த மாநிலங்களுக்கு செல்வதாக தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் முதல்வர்  ஸ்டாலின் ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டுக்கு வாருங்கள் எனக்  கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கிறது.எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கி, மக்களுக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் என மத்திய பிரதேச முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து அழைக்கிறார். பீகார் முதலமைச்சர் கோவை வந்து அழைக்கிறார்.

திமுக

நமது முதலமைச்சர் இங்கிருக்கும் தொழிலதிபர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஒப்பந்தம் போட்டு ஏதோ வெளிநாட்டினர் இங்கு வந்து புதிதாக தொழில் தொடங்குவது போல நாடகம் நடத்தி வருகிறார். 9 அமாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் லஞ்சம், ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி, நல்லாட்சி அமைத்திட நாம் அனைவரும் கடமையாக உழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது