அரசு மருத்துவமனையில் புகை பிடித்த எம்.எல்.ஏ... அதிர்ச்சி வீடியோ வைரல்!

 
பீகார்

பீகார் மாநிலத்தில் JDU கட்சியினர் எம்.எல்.ஏ அனந்த் சிங் மருத்துவமனை விதிகளை மீறி புகை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

சிறையில் இருக்கும்போதும், பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (IGIMS) மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட அனந்த் சிங், மருத்துவமனை அறைக்குள் அமர்ந்து எவ்வித அச்சமின்றி புகை பிடிக்கும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்தார். பொதுவாக மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மக்கள் பிரதிநிதி இதுபோல் நடந்தது அதிர்ச்சியாக அமைந்தது.

எதிர்க்கட்சிகள் “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளனர். சிறை கைதியாக இருக்கும்போது இவ்வாறு நடந்தது எப்படி என்பதற்கான கேள்விகள் எழுந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்போகிறார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!