தவறி விழுந்து விபத்து... முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்!

 
சுந்தரம்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. N. சுந்தரம் இன்று ஜனவரி 26 காலமானார். மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் அவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உடல்நலக் குறைவு காரணமாகச் சில காலமாக ஓய்வில் இருந்து வந்த சுந்தரம், இன்று மதியம் மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனை வாசலில் காரில் இருந்து இறங்கும் போது, அவர் எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


சுந்தரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை (1996-2001 மற்றும் 2006-2011) உறுப்பினராகப் பணியாற்றி, அந்தத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். தொகுதி மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த அவர், எளிய மனிதராகவே அறியப்பட்டார்.
சுந்தரம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "திரு. சுந்தரம் என்னுடைய 35 ஆண்டுகாலத் தோழர். இன்று மதியம் 2 மணிக்கு நான் டெல்லி வந்தடைந்த நிலையில், 3 மணிக்கு இந்தத் துயரச் செய்தி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். உடல்நலம் சீரடைந்து மீண்டும் கட்சிப் பணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அவரது மறைவு குடும்பத்திற்கும், கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.சுந்தரம் அவர்களின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது இல்லத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!