வளர்ச்சி ஆய்வு கூட்டத்தில் வெடித்த மோதல்… MLA மீது பாய்ந்த MLC ... பரபரப்பு வீடியோ!
கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற காலாண்டு வளர்ச்சி ஆய்வு கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஹுமனாபாத் தொகுதி எம்.எல்.ஏ. சித்து பாட்டீல், எம்.எல்.சி. பீம்ராவ் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
#JustIn | Clash breaks out at KDP (Karnataka Development Programme) meeting in Bidar as a BJP MLA and Congress MLC exchange blows in presence of Minister Eshwara Khandre
— News18 (@CNNnews18) January 5, 2026
News18's @afreen_hussain_ with details @SaroyaHem | #Karnataka pic.twitter.com/0hEshEoKFa
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வளர்ச்சி பணிகள் தொடர்பாக எம்.எல்.ஏ. சித்துவுக்கும், எம்.எல்.சி. பீம்ராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வனநிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் கை நீட்டி குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்ட நிலையில், பீம்ராவ் திடீரென எழுந்து சென்று சித்துவை அடிக்க பாய்ந்தார்.

இதனால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல் துறை உயரதிகாரி ஒருவர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றாலும், வாக்குவாதம் தொடர்ந்தது. இதையடுத்து மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் ஈஸ்வர் காந்திரே, கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்து வெளியேறினார். அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
