இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை!!

தமிழகம், புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்தும், வெயில் கொளுத்தியும் வருகிறது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மே 27ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் இருக்கலாம்.
மே 25 முதல் 27 வரை மன்னார் வளைகுடா மற்றும் தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மே 26 மற்றும் 27 முதல் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!