ஆட்டம்... கொண்டாட்டம்... அடுத்த 4 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் பகல் பொழுதுகளில் வெயில் சதமடிக்கிறது. இந்த மழை ஜூலை 2ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மழை

அதில்  இன்று ஜூன் 29ம் தேதி வியாழக்கிழமை முதல்  ஜூலை 1ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளில் ஓரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை  2ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இடி மின்னல் மழை

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.  அத்துடன் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகள்,   தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும்.இதனையடுத்து மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web