குஷியோ குஷி... நாளை முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இப்போதே வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 25 முதல் மாா்ச் 1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நாளை பிப்ரவரி 25ம் தேதி செவ்வாய்கிழமை வறண்ட வானிலையே நிலவும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 25ம் தேதி முதல் மாா்ச் 1ம் தேதி வரை தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பிப்ரவரி 24ம் தேதி திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 27 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!