சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை!

 
பனி, மழை


 
தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.  கடந்த 4 நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வானிலை மையமும் தமிழகத்தில் மெல்ல அதாவது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.  அதற்கேற்ப வெப்பம் அதிகரித்ததால் நேரங்களில் அசௌகரியமான சூழல் இருந்து வந்தது.  இருப்பினும் மாலை நேரங்களில் வெயில் தனித்து ஆங்காங்கே மழை பெய்து வந்தது.  

மழை


குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பகல் முழுவதும் வெயில், இரவு நேரங்களில் மிதமான மழை என்ற சூழல் தான் இருந்து வந்தது. நேற்றைய  தினம் வரையில் வெயில் கொளுத்திய நிலையில் , பிறபகலுக்கு மேல் சென்னை  உட்பட பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது.

மழை

தமிழகத்தில் 28 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் இன்று  11 மாவட்டங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது