அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழை!!

 
rain

தமிழகத்தில்   கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்,  மேற்கு திசை காற்று வேக மாறுபாடு ஆகியவை காரணமாக இன்று  ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில்   தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர்   மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

umbrella in Rain

 இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை   மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

School Student in Rain

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்   பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை திங்கட்கிழமை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.  வளிமண்டல சுழற்சி காரணமாக   கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு  காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என   சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இன்று தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web