குடை எடுத்திட்டு போங்க!! பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழை!!

 
மழை

 தென்மேற்கு மற்றும்  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  இன்று  தமிழகம்,  புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை ,  தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர்  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று காலை முதலே பல மாவட்டங்களில் பரவலாக பலமழை பெய்து வரும் நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

school rain

அதே சமயம் இன்று நீலகிரி, கோவை,  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்  தமிழகம், புதுச்சேரி   மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தியுள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்  மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கனமழையும் பெய்யக்கூடும்.  

School Student in Rain

இன்று ஜூலை 4ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழையும்  திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web