ஜூன் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

 
மழை


 
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மார்ச் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மழை
சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வெயில் மழை
தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., சோலையாறில் 10 செ.மீ., சின்கோனாவில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., கோவை மாவட்டம் ‘உபாசி’, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது