ஜூலை 6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
ஜூலை 5 மற்றும் 6 ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜூலை 4 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 01-07-2025 மற்றும் 02-07-2025: மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒரிசா-மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
4ம் தேதி ஜூலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு – தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!