தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் மழை வெயில் மழை

தமிழக உள் மாவட்டங்கள் முதல் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் திடீர் மாற்றத்தால் சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவக்கூடும்.

Rain Womens Walking

வரும் ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழையோடு சேர்த்து வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையானது படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

school rain

குறிப்பாகச் சமவெளிப் பகுதிகளில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழையும் வெயிலும் மாறி மாறி நிலவ வாய்ப்புள்ளதால் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வானிலை மாற்றம் விவசாயப் பணிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!