இன்று இரவு முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்பு ... வெதர்மேன் பிரதீப் ஜான்!

 
வெதர்மேன்
 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பலத்ததாகப் பதிவானது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் பகுதிகளில் அதிகமாக பெய்த மழை கடலோரத்திலேயே சுருங்கியதால் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை என வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

மழை கனமழை வெதர்மேன்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பகலில் சிதறல் மழை பெய்யக்கூடும். ஆனால் வழக்கம்போல் இன்று இரவு முதல் நாளை காலைவரை மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். அபாயமில்லாத வகையில் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெதர்மேன்

தற்போது குமரி கடல்-இராமநாதபுரம் கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை இருக்க வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!