ஜனவரி 28ம் தேதி மோடி, ராகுல் இருவரும் தமிழகம் வருகை... சூடு பிடிக்கும் தேர்தல் களம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வரும் ஜனவரி 28-ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அதே நாளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வரவுள்ளார். இதனால், ஒரே நாளில் இரு முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வரும் நிலையில், மோடி–ராகுல் வருகை தமிழக அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. வரும் நாட்களில் தேர்தல் அரசியல் இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
