பாரதியின் சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீண்ட தாக்கம் ஏற்படுத்தின... பிரதமர் மோடி!
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி எட்டயபுரத்தில் 1882ல் பிறந்த பாரதி, தமிழ் இலக்கியத்திலும், தேச உணர்விலும் அழியாத தடம் பதித்தவர். அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு இன்று மரியாதை செலுத்தினர்.

பாரதியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி எக்ஸில் பதிவு ஒன்றை வெளியிட்டார். “பாரதிக்கு என் வணக்கம். அவரது கவிதைகள் துணிவை எழுப்பின. அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீண்ட தாக்கம் ஏற்படுத்தின” என்று எழுதினார். இந்தியாவின் கலாச்சாரத்தையும் தேசிய உணர்வையும் பாரதி மேலும் ஒளிரச் செய்தார் என கூறினார்.

அனைவரையும் இணைக்கும் நீதிச் சமூகத்தை உருவாக்க அவர் போராடியதை பிரதமர் நினைவுபடுத்தினார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய பாரதியின் பங்களிப்பு ஒப்பிலாதது என பாராட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
