’ச்சாய் வாலா’ மோடி... பிரதமரை கேலி செய்யும் ஏஐ வீடியோ... காங்கிரசின் அடுத்த தாக்குதல்!
காங்கிரஸ் தலைவர் ராகினி நாயக் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த செய்யறிவு (AI) வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சிவப்பு கம்பள வரவேற்பில், பிரதமர் நரேந்திர மோடி தேநீர் குவளைகளுடன் “ச்சாய்… ச்சாய்…” எனக் கூவி வருகிறார் என உருவாக்கப்பட்ட அந்த வீடியோ அரசியல் சூழலில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தில்லியைச் சேர்ந்த ராகினி நாயக், “யார் இதை செய்தது?” என்ற குறிப்புடன் அந்த வீடியோவை பகிர்ந்தார். இதனையடுத்து பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமரை கேலி செய்ததாகவும், இது அரசியல் மரியாதையை மீறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
अब ई कौन किया बे 🥴🤣 pic.twitter.com/mbVsykXEgm
— Dr. Ragini Nayak (@NayakRagini) December 2, 2025
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, “ஏழைப் பின்னணியில் இருந்து வந்த ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த காம்தார் பிரதமரை, நாம்தார் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மோடியை 150 முறை அவமானப்படுத்தியுள்ளனர். அவரது தாயாரையும் வீடியோவில் சித்தரித்து அவமானப்படுத்தினர். மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்” என்று கடுமையாக பதிலளித்துள்ளார்.
குஜராத்தில் சிறுவயதில் தேநீர் விற்றதாகக் கூறப்படும் பிரதமர் மோடியை, ‘ச்சாய் வாலா’ என காங்கிரஸ் தலைவர்கள் முன்பும் கிண்டல் செய்துள்ளனர். ராகுல் காந்தி உள்பட பலர் பயன்படுத்திய இந்த வார்த்தை பலமுறை சர்ச்சையை கிளப்பியதோடு, 2014 தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
