நாளை மறுநாள் பிரதமர் மோடி வருகை… முழு பாதுகாப்பு வளையத்தில் சென்னை விமான நிலையம் !

 
modi

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வருவதை முன்னிட்டு, சென்னை விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மோடி வெளிநாடு

இதற்காக அவர் ஜனவரி 23ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மதுராந்தகம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். கூட்டத்தை முடித்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து, மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

வெளிநாடு மோடி விமானத்தில்

பிரதமரின் வருகையை முன்னிட்டு, தில்லியில் இருந்து எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் அமி சந்த் யாதவ் தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து வரும் 23ஆம் தேதி வரை சென்னை விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!